அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
x
சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது எடுத்த படம்.
தினத்தந்தி 30 Jan 2021 12:36 PM IST (Updated: 30 Jan 2021 12:36 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

சிவகங்கை,

சிவகங்கையில் காலமுறை ஊதியம் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்  நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மாவட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது ஒவ்வொரு ஊழியருக்கும் ரூ.10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும்.ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாக்கியமேரி முன்னிலை வகித்தார்.

கலந்து கொண்டவர்கள்
இதில் மாவட்ட பொருளாளர் தாமரைச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயமங்கலம், மாவட்ட துணைத்தலைவர்கள் லட்சுமி, மலர், சசிகலா தவமலர், மாவட்ட இணைச்செயலாளர்கள் கலைச்செல்வி, ராதா, சச்சின், பிரேமா, இக்ணிஸ்ஜோஸ்பின்ராணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் உமாநாத், மாவட்ட செயலாளர் வீரையா, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் பாண்டி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

Next Story