அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்


அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2021 12:36 PM IST (Updated: 30 Jan 2021 12:36 PM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்:
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காலமுறை ஊதியம் உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். 
இதற்காக கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் வட்டார அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்று மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மாவட்ட தலைவி தமிழ்செல்வி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 
மாவட்ட செயலாளர் செல்வதனபாக்கியம் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
இதில் மாநில தலைவி ரத்தினமாலா, மாவட்ட பொருளாளர் மல்லிகா, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக்அலி, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்றி, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மேலும் அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதேபோல் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு தலா ரூ.5 லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர்.

Next Story