தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து கழக கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து கழக கூட்டமைப்பினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து கழக கூட்டமைப்பினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கூட்டமைப்பு சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தொ.மு.ச. துணை செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. ஜான் கென்னடி மாணிக்கம், நகர செயலாளர் மரியதாஸ், மாவட்ட செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சிமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கோரிக்கைகள்
தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். பேச்சுவார்த்தையின் போது தகுதியில்லாத சங்கங்களை அழைக்க கூடாது. நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைபடி உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 100- க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள்
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தூத்துக்குடி அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலகம் முன்பு நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு எல்.பி.எப். பணிமனை செயலாளர் முத்துராஜ் தலைமை தாங்கினார், சி.ஐ.டி.யு. பணிமனை செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. பிச்சைமணி, எல்.பி.எப். மற்றும் ஓய்வு பெற்ற அமைப்பு தங்க பெருமாள் உள்பட பலர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story