தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி போராட்டம்
ராமேசுவரத்தில் அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றக்கோரி போராட்டம் நடந்தது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் பகுதியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் கோவில் பஸ் நிலையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பகுதியான ராமதீர்த்த சாலையில் மழைநீர் அதிக அளவில் தேங்கி நின்றது. சாலையில் தேங்கி நின்ற மழை நீர் பள்ளிக்கூட சுற்றுச்சுவர் வழியாக பள்ளியின் வளாக பகுதிக்குள் புகுந்தது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தின் கட்டிட பகுதி சூழ்ந்து அதிகளவு மழைநீர் தேங்கி நின்று வருகிறது.தண்ணீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி வளாகப் பகுதியில் அதிக அளவில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக அகற்றக்கோரி நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் முருகானந்தம், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்வேல், தாலுகா துணைச் செயலாளர் வடகொரியா மற்றும் கட்சி நிர்வாகிகள் ஞானசேகரன், பாண்டி, ஜீவானந்தம், திருவாசகம், நந்த கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் ராமேசுவரம் நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ ்பெக்டர் சசிகுமார் மற்றும் அதிகாரிகள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து போராட் டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.
Related Tags :
Next Story