அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
அரசு ஆஸ்பத்திரி செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் தொகுப்பூதியத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும், கொரோனா கால பணிக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது போன்ற 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்படிபரமக்குடி அரசு ஆஸ்பத்திரி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட அரசு செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வளாகத்தில் மாவட்ட செயலாளர் வீரம்மாள் தலைமையில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், இணை செயலாளர் ஜோசப் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து செவிலியர்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story