அரசு மருத்துவமனையில் துணை இயக்குனர் ஆய்வு


முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில்  துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்
x
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார்
தினத்தந்தி 30 Jan 2021 8:43 PM IST (Updated: 30 Jan 2021 8:44 PM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவமனையில் துணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் ராமநாதபுரம் மாவட்ட காசநோய் துணை இயக்குனர் மருத்துவர் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்தார். இதில் புறநோயாளிகள் வருகை மற்றும் ஆய்வகங்கள் எக்ஸ்ரே மையங்கள் போன்ற வற்றை ஆய்வு செய்தார். மேலும் காச நோயாளி களுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். காச நோயாளிகள் கண்டறிவது பற்றி பயிற்சி வழங்கினார். ஆய்வின் போது மருத்துவர்கள் சரத்குமார், சுந்தர மூர்த்தி, சோபிகா, சாரதா மற்றும் முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் மோகன் பாலா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story