விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா


விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 30 Jan 2021 9:52 PM IST (Updated: 30 Jan 2021 9:54 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர்,

மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 93 ஆயிரத்து 31 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.  16,299 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 22 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 

மாவட்டத்தில் நேற்று மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  16 ஆயிரத்து 561 ஆக உயர்ந்துள்ளது.

 1,880 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை 3,328 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவபரிசோதனைமுடிவுகளை அறிவிப்பதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படவில்லை.

Next Story