1½ லட்சம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது


1½ லட்சம் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகிறது
x
தினத்தந்தி 30 Jan 2021 9:56 PM IST (Updated: 30 Jan 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

1½ லட்சம் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்க விருதுநகர் மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளது.

விருதுநகர்,

நாடு முழுவதும் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் போலியோ நோயை ஒழிக்க கடந்த பல ஆண்டுகளாக குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு சேவை சங்கங்களின் உதவியுடன் மத்திய, மாநில அரசுகள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

 வழக்கமாக ஆண்டு இறுதியில் நடத்தப்படும் இந்த முகாம்  தற்போது சற்று காலதாமதமாக நடத்தப்படுகிறது. மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,168 சிறப்புமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 இதுதவிர 28 நடமாடும் குழுக்கள் மூலமும், அகதிகள் முகாம்கள் மற்றும் குடிசைப்பகுதிகளிலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 46 நடமாடும் குழுக்கள் மூலம் பஸ் நிலையங்கள், ெரயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் திருமண நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 674 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படுகிறது. இப்பணியில் 4,580 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு சளி, இருமல், வயிற்றுப்போக்கு பாதிப்பு இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 முகாம்கள் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைநடைபெறும். முகாம்களுக்கு சென்று போலியோ சொட்டு மருந்து கொடுத்து பெற்றோர்தங்கள் குழந்தைகளுக்கு போலியோ நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story