குக்கரால் வாலிபரை தாக்கி கொலை செய்த தந்தை


குக்கரால் வாலிபரை தாக்கி கொலை செய்த தந்தை
x
தினத்தந்தி 30 Jan 2021 10:21 PM IST (Updated: 30 Jan 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

குடிபோதையில் குக்கரால் வாலிபரை தாக்கி கொலை செய்த தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

மதுரை,

மதுரை பீ.பி.குளம் முல்லைநகர் கண்ணப்பர் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்(வயது 47). இவருடைய மனைவி சந்திரா. இவர்களது மகன் பிரவீன். அந்த பகுதியில் உள்ள வெல்டிங் பட்டறையில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று, குடிபோதையில் இருந்த ராமதாசுக்கும், அவருடைய மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரம் அடைந்த ராமதாஸ், பிரவீனை காலால் உதைத்துள்ளார். மேலும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் குக்கரை எடுத்து பிரவீனின் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த பிரவீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.. இதனை தொடர்ந்து ராமதாஸ் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். 

இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதற்கிடையே, மனைவி அளித்த புகாரின் பேரில் ராமதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story