தூத்துக்குடியில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்து இருந்தவர் கைது


தூத்துக்குடியில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்து இருந்தவர் கைது
x
தினத்தந்தி 30 Jan 2021 10:41 PM IST (Updated: 30 Jan 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்து இருந்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி தாளமுத்துநகா் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, தாளமுத்துநகர் பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். 

மேலும் அவரிடம் சோதனை மேற்கொண்டதில் உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கி (ஏர் கன்) மற்றும் தோட்டாக்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கைது

விசாரணையில் அவர் பழையகாயல் புல்லாவழியைச் சேர்ந்த ஜெயராஜ் (வயது 50) என்பதும், அவர் மீது ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்கு பதிவு செய்து, ஜெயராஜை கைது செய்தனர். அவரிடம் இருந்த கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாராட்டு தெரிவித்தார்.

Next Story