வேளாண் சட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்


வேளாண் சட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2021 10:55 PM IST (Updated: 30 Jan 2021 10:57 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம், வேளாண் சட்டத்தை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

பனைக்குளம்.

ராமநாதபுரம் மாவட்டம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேளாண் சட்டத்தை கைவிடக்கோரி மாவட்டம் முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மண்டபம் ஒன்றியம் உச்சிப்புளி, மண்டபம், பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் ராமநாதபுரம் யூனியன் தேவிப்பட்டிணம் பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றன.  ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் செய்யது முகம்மது இப்ராகிம் தலைமையில் உச்சிப்புளியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ஜலீல் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். ராமநாதபுரம் மாவட்ட் செயலாளர் ஷேக் தாவூத் நன்றி கூறினார். 

Next Story