வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி பிரசாரம்


வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி பிரசாரம்
x
தினத்தந்தி 31 Jan 2021 5:26 AM IST (Updated: 31 Jan 2021 5:26 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி மெழுகுவர்த்தி ஏந்தி பிரசாரம் செய்யப்பட்டது.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி பெரம்பலூரில் மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நடந்த பிரசாரத்திற்கு அமைப்பின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஹம்மது அலி தலைமை தாங்கினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபிக் முன்னிலை வகித்தார். காஜா சரீப் கண்டனம் தெரிவித்து பேசினார். இதில் கலந்து கொண்டவர்கள் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

Next Story