கோவையில் 4 வயது குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு பெற்றோர் கைது


கோவையில் 4 வயது குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு பெற்றோர் கைது
x
தினத்தந்தி 31 Jan 2021 1:00 AM GMT (Updated: 31 Jan 2021 1:00 AM GMT)

கோவையில் 4 வயது குழந்தையை அடித்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு பெற்றோர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்


4 வயது குழந்தைக்கு கொடுமை

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் அப்துல்லா. இவருக்கு திருமணம் முடிந்து 6 ஆண்டுகளாக குழந்தையில்லாத காரணத்தால் காந்திபுரம் 5-வது வீதியைச் சேர்ந்த ஒரு  தம்பதியினரின் 4 வயது பெண் குழந்ைதயை சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

 குழந்தையின் பெயரை மாற்றி வளர்த்து வந்த நிலையில் வீட்டில் இருந்து சிறுமியை வளர்ப்பு பெற்றோர் இருவரும் அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குழந்தையை கடுமையாக அடித்து கொடுமை செய்வதை பார்த்த அப்பகுதி மக்கள் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

 குழந்தையை மீட்ட பொதுமக்கள் குழந்தையின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வளர்ப்பு பெற்றோரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மற்றொரு சிறுமியும் மீட்பு

வளர்ப்பு தாய், தந்தை 2 பேர் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர். 

அப்போது சட்டபூர்வமின்றி தத்துகொடுத்த தம்பதிக்கு மற்றொரு பெண்ணுக்கு 7 வயது மகள் இருப்பதும், அந்த சிறுமியையும் வேறு ஒரு பெண்ணுக்கு சட்டவிரோதமாக தத்துகொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த சிறுமியும் மீட்கப்பட்டாள்.

4 பேர் கைது

இதுதொடர்பாக போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல்லா, அவருடைய மனைவி, மற்றொரு பெண், சட்டவிரோதமாக தத்து எடுக்க உதவிய சிக்கந்தர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் சிறுமிகளின் பெற்றோர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

குழந்தைகள் பணம் கொடுத்து விற்பனை செய்யப்பட்டார்களா என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் போத்தனூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story