வங்கியில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வாலிபர்


வங்கியில் கண்ணாடியை அடித்து நொறுக்கிய வாலிபர்
x
தினத்தந்தி 31 Jan 2021 2:31 AM GMT (Updated: 31 Jan 2021 2:33 AM GMT)

வங்கியில் கண்ணாடியை வாலிபர் ஒருவர் அடித்து நொறுக்கிச்சென்றார்.

பொன்மலைப்பட்டி, 

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று மதியம் அந்த வங்கிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தான் வைத்திருந்த அரிவாளால் வங்கி மேலாளர் அறையின் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்று தப்பி விட்டார். 

இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு பொன்மலை போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அங்கு கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து, அந்த மர்ம வாலிபர் யார்? எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story