முதியவர் தற்கொலை
வாசுதேவநல்லூர் அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே உள்ள தேசியம்பட்டி மடத்து தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). தொழிலாளி. இவருடைய மனைவி அன்னபாக்கியம் (55). இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர். இவருக்கு அடிக்கடி நெஞ்சு வலி வந்ததால் அதற்கு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கோவிந்தசாமி அவரது மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அன்னபாக்கியம் தனது மகள் வீட்டிற்குச் சென்றுவிட்டார். தனிமையில் இருந்த கோவிந்தசாமி மனவேதனை அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story