குருவின் பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் மரியாதை செலுத்த தடை
குருவின் பிறந்த நாளையொட்டி நினைவிடத்தில் மரியாதை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடையார்பாளையம்,
மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வும், வன்னியர் சங்க தலைவராக இருந்தவருமான குருவின் பிறந்த நாள் நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு கருதி உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் பூங்கோதை தலைமை தாங்கினார். கூட்டத்தில், கொரோனா தொற்று காரணமாக 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாலும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதியும் கடந்த ஆண்டைப் போன்று குருவின் பிறந்த நாளைெயாட்டி அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரவர் கிராமத்திலேயே அமைதியாக பிறந்த நாளை கொண்டாடி கொள்ளலாம் என்று கோட்டாட்சியர் தெரிவித்தார். இந்த முடிவு பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் மாநில பா.ம.க. துணை செயலாளர் திருமாவளவன், மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் வன்னியர் சங்கத்தினர், மஞ்சள் படை அமைப்பினர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story