பெண்கள் சிறப்பு காவல் படையினருக்கு வழியனுப்பு விழா


பெண்கள் சிறப்பு காவல் படையினருக்கு வழியனுப்பு விழா
x
தினத்தந்தி 31 Jan 2021 11:09 AM IST (Updated: 31 Jan 2021 11:09 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் பயிற்சி நிறைவு செய்த பெண்கள் சிறப்பு காவல் படையினருக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கி வழியனுப்பும் விழா நடந்தது.

திருச்சி,

திருச்சி காஜாமலையில் உள்ள ரெயில்வே பாதுகாப்பு படை மையத்தில் 295 பெண் சிறப்பு காவல் படையினருக்கு கடந்த சில மாதங்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இந்த பயிற்சி முகாமில் அசாம், பீகார், மத்திய பிரதேசம், தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரப் பிரதேசம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பயிற்சியாளர்கள் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.
நேற்றுடன் பெண் சிறப்பு காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று சிறப்பு காவல் படையினருக்கு வழியனுப்பும் விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு முதன்மை பயிற்சியாளர் அருணாசலம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தென்னக ெரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ரெயில்வே போலீஸ் ஐ.ஜி. பிரேந்தரகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். முன்னதாக பெண் சிறப்பு காவல் படையினர் அதிகாரிகள் முன்னிலையில் அணிவகுப்பு நடத்தினர். தொடர்ந்து பயிற்சி பெற்ற காவல் படையினர் 295 பேரையும் வழியனுப்பி வைத்ததுடன் அவர்களுக்கு பயிற்சி சான்றிதழையும் தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் வழங்கினார். விழாவில் பயிற்சி பெற்ற பெண் சிறப்பு காவல் படையினரின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story