சாலைகளில் இரும்பு சக்கரத்துடன் டிராக்டர் ஓட்டினால் அபராதம்; அதிகாாி எச்சாிக்கை
சாலைகளில் இரும்பு சக்கரத்துடன் டிராக்டர் ஓட்டினால் அபராதம் என்று அதிகாாி எச்சாித்துள்ளாா்.
வேப்பந்தட்டை,
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை அதிக அளவில் பெய்தது. இதனால் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதையடுத்து விவசாயிகள், விவசாய பணிகளை மேற்கொள்ள டிராக்டர் மூலம் உழவு செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை நஞ்சை ஓட்டுவது என்று அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் டிராக்டர்களில் இரும்பு சக்கரம் மாட்டி வயல்களில் நஞ்சை ஓட்டி முடிந்த பின் அருகில் உள்ள வயல்களுக்கு செல்வதற்கு அல்லது மற்ற ஊர்களுக்கு செல்லும்போது, பலர் சாலைகளில் இரும்பு சக்கரத்துடன் டிராக்டரை இயக்குகின்றனர். அவ்வாறு இயக்கப்படும்போது தார் சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து பள்ளம் ஏற்படுவதால், பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் சாலைகள் விரைவில் சேதம் அடைகிறது. எனவே டிராக்டர் வைத்திருப்பவர்கள் இரும்பு சக்கரத்துடன் சாலைகளில் டிராக்டரை ஓட்டினால் அவர்களின் விவரத்தை சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிவித்து, அபராதம் விதிக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story