கொங்கணாபுரத்தில் ரூ.2.40 கோடிக்கு பருத்தி ஏலம்


கொங்கணாபுரத்தில் ரூ.2.40 கோடிக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 31 Jan 2021 11:15 AM IST (Updated: 31 Jan 2021 11:15 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2.40 கோடிக்கு பருத்தி ஏலம்

எடப்பாடி:
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தி விற்பனையாளர்கள் சங்கத்தின் கொங்கணாபுரம் கிளை பருத்தி ஏல மையத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, மேட்டூர், பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்றனர். மொத்தம் 9 ஆயிரத்து 500 பருத்தி மூட்டைகள் ரூ.2 கோடியே 40 லட்சத்துக்கு ஏலம் போனது. இதில், டி.டி.எச். ரக பருத்தி மூட்டைகள், குவிண்டால் (நூறு கிலோ) ரூ.7 ஆயிரத்து 940 முதல் ரூ.8 ஆயிரத்து 772 வரை ஏலம் விடப்பட்டது. பி.டி. ரக பருத்தி மூட்டைகள் குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 779 முதல் ரூ.6 ஆயிரத்து 792 வரை ஏலம் போனது. இந்த ஏலத்தில் சேலம், திருப்பூர், கோவை ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு பருத்தி மூட்டைகளை ஏலம் எடுத்தனர்.

Next Story