விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீீவில்லிபுத்தூரில் வேளாண்மை துறை சார்பில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் பகுதியில் நடைெபற்ற இந்த முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கு இணையத்தின் வழியாக சென்னை மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
முகாமை வாழ்த்தி இணையத்தின் வழியாக விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் மற்றும் நாக்பூர் பருத்தி வளர்ச்சி இயக்குனர் ஆர்.பி.சிங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். வேளாண்மை இணை இயக்குனர் சுகுமார் பாண்டே வரவேற்றார். விருதுநகர் வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்ட ராமன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையம் அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீவில்லிபுத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story