தூத்துக்குடியில்.சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம், பதவி உயர்வு வழங்க கோரிக்கை
தூத்துக்குடியில் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி சுகாதார பணியாளர்கள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். செயற்குழு உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், மந்திரராஜன் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் 246 சுகாதார ஆய்வாளர்களுக்கு வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும், 14 ஆண்டுகள் தாமதமாக பணி நியமனம் செய்யப்பட்ட 750 சுகாதார ஆய்வாளர்களை பழைய ஓய்வூதியத்தில் சேர்க்க வேண்டும், கொரோனா காலத்தில் பணியாற்றிய சுகாதார ஆய்வாளர் நிலை-2 பிரிவினருக்கு சுகாதார ஆய்வாளர் நிலை-1 பதவி உயர்வு வழங்க வேண்டும், கொரோனா காலத்தில் பணியாற்றிய 2 ஆயிரத்து 715 2-ம் நிலை சுகாதார ஆய்வாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் மகராஜன், துணை செயலாளர் சங்கரன், தணிக்கையாளர் முத்துக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஆழ்வார், செல்வக்குமார், இம்மானுவேல், முத்துசாமி, அய்யலுசாமி, ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பொம்மையா நன்றி கூறினார்.
Related Tags :
Next Story