வளர்இளம் பருவத்தினர் இணையதளத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த சொல்லித்தர வேண்டும்
வளர்இளம் பருவத்தினர் இணையதளத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த சொல்லித்தர வேண்டும் என்று இந்திய மனநல மருத்துவர் சங்க மாநில தலைவர் சபிதா கூறினார்.
தூத்துக்குடி,
வளர்இளம் பருவத்தினர் இணையதளத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த சொல்லித்தர வேண்டும் என்று இந்திய மனநல மருத்துவர் சங்க மாநில தலைவர் சபிதா கூறினார்.
இந்திய மனநல மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மனநல மருத்துவர்களுக்கான கருத்தரங்கம் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்துக்கு மனநல மருத்துவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மனநல சிறப்பு மருத்துவர் சிவசைலம் முன்னிலை வகித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி பாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். இந்திய மனநல மருத்துவர் சங்க மாநில தலைவர் சபிதா பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
தற்போதைய காலகட்டத்தில் குழந்தைகள், வளர்இளம் பருவத்தினருக்கு மனநலம் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாக எழுகிறது. அதில் இருந்து அவர்கள் விடுபடுவதற்கும், மீட்டெடுப்பதற்கான கருத்தரங்கம் தூத்துக்குடியில் நடத்தப்படுகிறது.
குழந்தைகளும், வளர் இளம் பருவத்தினரும், பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்தும், மனநலம் சார்ந்து அவர்களை திடப்படுத்துவதும் அவசியம் ஆகும். வளர்ந்துவிட்ட தகவல் தொழில்நுட்பத்தால் மனநல பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இணையதளத்தில் அதிகமாக நேரம் செலவிடுதல், பெற்றோர் கண்பார்வையில் இருப்பதால் ஏற்படும் அழுத்தம், படிப்பு ரீதியான பிரச்சினைகள் குழந்தைகளை மனரீதியாக பாதிக்கிறது.
இந்த சூழ்நிலையில், அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் தேவைப்படும். அதனால் மனநல டாக்டர்களை நாடும் நிலை ஏற்படுகிறது. பொதுவாக தற்போதைய சூழலில் குழந்தைகள், வளர் இளம்பருவத்தினர் மன அழுத்தத்தை கோபப்படுதல், எதிர்த்து பேசுதல், கண்டுகொள்ளாமல் இருப்பது போன்ற வெவ்வேறு காரணிகள் மூலம் வெளிப்படுத்துகின்றனர். இணையதளத்தை பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதை விட பயனுள்ள முறையில் அதனை பயன்படுத்த சொல்லித்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story