வாணியம்பாடி-திருப்பத்தூர் 4 வழிச்சாலை விரிவுபடுத்த சாலையோர மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்
வாணியம்பாடி, திருப்பத்தூர் தேசிய 4 வழி சாலை விரிவுபடுத்த முதல்கட்டமாக சாலையோர மரங்கள் வெட்டும் ெதாடங்கியது.
ஜோலார்பேட்டை
வாணியம்பாடி - திருப்பத்தூர் தேசிய 4 வழி சாலை விரிவுபடுத்த முதல்கட்டமாக சாலையோர மரங்கள் வெட்டும் பணி தொடங்கியது.
4 வழிச்சாலை
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை தேசிய 4 வழி சாலை அமைக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 24-ந் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டுசக்கரக்குப்பம், ஆஞ்சநேயர் கோயில் பகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி, கலெக்டர் சிவன்அருள் ஆகியோர் தலைமையில் பூமி பூஜைக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது.
இதனையடுத்து வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் முருகன் தலைமையில் துறை அதிகாரிகள் மூலம் வாணியம்பாடி திருப்பத்தூர் வரை 3 பிரிவாக பிரிக்கப்பட்டு சாலையோரங்களில் மரங்கள் மற்றும் சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரங்கள் அகற்றும் பணி
இந்த நிலையில் முதற்கட்ட பணியாக ஜோலார்பேட்டை முதல் பொன்னேரி வரை சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டுதல் மற்றும் சாலையை விரிவு படுத்துவதற்கான ஆய்வு பணி இன்று ெதாடங்கியது.
முதலில் சாலையோரத்தில் ஒரு பக்கம் உள்ள மரங்களை முழுமையாக வெட்டி அகற்றப்பட்டு அதன் பிறகு மறுபக்கத்தில் உள்ள மரங்கள் வெட்டி அகற்றி பிறகு தற்போதுள்ள தார் சாலையில் இருந்து இருபுறமும் 15 மீட்டர் தொலைவிற்கு சாலையை விரிவுபடுத்தும் பணிக்கான சர்வே செய்யும் பணி தேசிய நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மூலம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது.
ஜோலார்பேட்டை முதல் பொன்னேரி வரை முதல் கட்டமாக சாலையை விரிவுபடுத்தி அதன் பிறகு பொன்னேரி முதல் வாணியம்பாடி வரையும் பின்னர் ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் வரையும் சாலையோரத்தில் உள்ள மரங்களை அகற்றி சாலை விரிவுபடுத்துவதற்கான பணி நடைபெற உள்ளது.
விரைந்து முடிக்க வேண்டும்
இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் சாலை விரிவுபடுத்துதல் மற்றும் மரங்களை வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story