சாலைகளில் மாடுகளை திரிய விட்டால் கடும் நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் மாடுகள் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்க விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் மாடுகள் சுற்றித்திரிந்தால் கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்க விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிரதான சாலைகள் உள்ளிட்ட பல்வேறு
இடங்களில் மாடுகள் தன்னிச்சையாக சுற்றித்திரிந்து வருவதாகவும், இதனால் விபத்துகள் ஏற்படுவதாகவும்
புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணமாக மாவட்டத்தின் மீதான நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுகிறது.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது மாடுகளை சாலைகள் உள்ளிட்ட
பொது இடங்களில் சுற்றித் திரிய விடக்கூடாது. சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சித்
துறையினரால் பிடிக்கப்பட்டு கால்நடை பராமரிப்பு மையங்களில் ஒப்படைக்கப்படும்.
உரிமையாளர்களுக்கு அபராதம்
முதல் முறையாக பிடிபட்டால் அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது
முறையாக பிடிபட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறை தவறு செய்தால் ரூ.10
ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் இந்த நிலை தொடர்ந்தால் அவர்களது மாடுகள் கைப்பற்றப்பட்டு
பொது ஏலம் மூலம் அரசுக்கு ஆதாயம் செய்யப்படும். அத்துடன் மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
செய்து காவல்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மாடுகளால் விபத்து ஏற்படின் அதன் உரிமையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே மாடுகளின் உரிமையாளர்கள் தங்களது மாடுகள் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் தன்னிச்சையாக
சுற்றி திரிவதை விழிப்புடன் இருந்து கட்டுப்படுத்தி, விபத்து இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு
அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story