மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் மத்திய தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்
வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.சிம்புதேவன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், எல்.பி.எப். மாவட்ட கவுன்சில் ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத் தலைவர் எஸ்.ஆர்.தேவதாஸ், எல்.பி.எப். செயலாளர் கே.ஆர். சுப்பிரமணி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் என்.காசிநாதன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story