எட்டயபுரம் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை
எட்டயபுரம் அருகேபெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே கீழஈரால் நடு தெருவைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கனக துர்காதேவி (வயது 34). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த கனக துர்காதேவி தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீசார் விரைந்து சென்று, இறந்த கனக துர்காதேவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story