புதுச்சேரியில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்


புதுச்சேரியில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2021 9:51 PM IST (Updated: 3 Feb 2021 9:51 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி:

புதுச்சேரி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மி‌‌ஷன் வீதி வ.உ.சி. பள்ளி அருகே பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. 

போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேது  செல்வம்,  சி.ஐ.டி.யு.   சீனுவாசன், ஐ.என்.டி.யு.சி. ஞானசேகரன், ஏ.ஐ.சி.சி.டி.யு. புருஷோத்தமன், எல்.எல்.எப். செந்தில், எம்.எல்.எப். வேதா வேணுகோபால், ஏ.ஐ.டி.யு.சி. சிவக்குமார், அரசு ஊழியர் சம்மேளனம் பிரேமதாசன், தொழிற்சங்க நிர்வாகிகள் தினே‌‌ஷ் பொன்னையா, முருகன், மோதிலால்,  சொக்கலிங்கம்   உள்பட   பலர்   கலந்து கொண்டனர்.

இதில் தொழிலாளர்களை அடிமைப்படுத்தும் தொழிலாளர் சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும், தனியார் மயமாக்கும் மின்சட்டத்தை திரும்ப பெற வேண்டும், அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை   வார்க்கக்கூடாது, பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்ட நகலை  தீயிட்டு எரித்தனர்.

Next Story