ஓடும் ரெயிலில் வாலிபர் திடீர் சாவு


ஓடும் ரெயிலில் வாலிபர் திடீர் சாவு
x
தினத்தந்தி 4 Feb 2021 4:00 AM IST (Updated: 3 Feb 2021 10:30 PM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜோலார்பேட்டை

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பாட்னா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டையில் வந்து நின்றது. அந்த ரெயிலில் பயணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தனது இருக்கையில் இருந்து திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார். 

இதுபற்றி சக பயணிகள் ெரயில்வே அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

ஓடும் ரெயிலில் இறந்தவர் மேற்கு வங்க மாநிலம் ராணி நகர் முசிறி ராபர்த் அடுத்த சர்ஜாபூர் பகுதியைச் சேர்ந்த சுபாத் மண்டல் என்பவரின் மகன் பிரசன்ஜித் மண்டல் (வயது25) எனத் தெரிய வந்தது.

 கேரளாவில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்கு புறப்பட்டதாக தெரிய வந்தது. 

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story