கேரளாவை சேர்ந்தவர் தற்கொலை
தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்தவர் தற்கொலை செய்து கொண்டார்
மதுரை,
மதுரை பெருமாள் தெப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 45) என்பவர் தங்கியிருந்தார். நேற்று காலை நீண்டநேமாகியும் அவர் தங்கியிருந்த அறையின் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு திடீர்நகர் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் அறையின் கதவை திறந்த பார்த்த போது அங்கு பெரோஸ்கான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரோஸ்கான் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story