கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று
கடலூர் மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 24 ஆயிரத்து 942 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 24 ஆயிரத்து 611 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ள நிலையில், 285 பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் நேற்று வெளியான பரிசோதனை முடிவில், புதிதாக 6 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும் 530 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.
Related Tags :
Next Story