மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 49 பேர் கைது + "||" + 49 government employees involved in the riot were arrested

பெரம்பலூரில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 49 பேர் கைது

பெரம்பலூரில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 49 பேர் கைது
பெரம்பலூரில் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 49 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர், 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும். கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு உயிரிழந்த அரசு ஊழியர்களுக்கு ரூ.50 லட்சமும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.2 லட்சமும் வழங்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று 2-வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பாலக்கரை ரவுண்டானா அருகே கூடினர். பின்னர் அவர்கள் அரசு ஊழியர் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தி்ல் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 49 பேரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கைது செய்து, வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் நேற்று இரவு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
2. கொரோனா தடுப்பூசி போடும்படி அதிகாரிகள் மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்த அங்கன்வாடி ஊழியர்கள்
கொரோனா தடுப்பூசி போடும்படி அதிகாரிகள் மிரட்டல்: கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்க குவிந்த அங்கன்வாடி ஊழியர்கள்.
3. அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
தெரு விளக்குகளை, எல்.இ.டி. விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரை, லோக் ஆயுக்தா விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளதாக ஐகோர்ட்டில் அட்வகேட் ஜெனரல் கூறினார்.
4. கரூரில் 3-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்
கரூரில் 3-வது நாளாக அரசு ஊழியர் சங்கத்தினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணம் செய்ய பொதுமக்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.