கோரிக்கைகளை வலியுறுத்தி மின் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி மின்ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தை தனியார்மயமாக்க கூடாது. மின்சார சட்ட திருத்த மசோதா 2020-ஐ கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில், தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் வேலை நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 640 மின் ஊழியர்களில், நேற்று 163 பேர் வேலைக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்வாரிய அலுவலகங்களில் அலுவலக பணிகளும் மற்றும் களப்பணிகளும் பாதிக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்ட ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமையில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story