சட்ட நகல்களை எரித்த தொழிற்சங்கத்தினர் 36 பேர் கைது


சட்ட நகல்களை எரித்த தொழிற்சங்கத்தினர் 36 பேர் கைது
x
தினத்தந்தி 4 Feb 2021 8:45 AM IST (Updated: 4 Feb 2021 8:52 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் சட்ட நகல்களை எரித்த தொழிற்சங்கத்தினர் 36 பேர் கைது.

தேனி,

தொழிலாளர் சட்ட திருத்தங்களையும், மின்சார சட்டம் 2020-ஐயும் திரும்பப் பெற வேண்டும்.  பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர் சட்ட நகல்கள் எரிப்பு போராட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் தேனி பழைய பஸ் நிலையம் முன்பு நேற்று நடந்தது. 

இதற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.  
தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, சட்ட நகல்களை எரித்தனர். அப்போது போலீசாருக்கும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர். 

அவர்களை தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story