இரு சக்கர வாகனம்-கார்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம்


ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பெரம்பலூரில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.
x
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பெரம்பலூரில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடந்த போது எடுத்த படம்.
தினத்தந்தி 4 Feb 2021 11:58 AM IST (Updated: 4 Feb 2021 12:00 PM IST)
t-max-icont-min-icon

ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து இரு சக்கர வாகனம்-கார்கள் மூலம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

பெரம்பலூர், 

32-வது சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு பெரம்பலூரில், வட்டார போக்குவரத்து அலுவலகம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவற்றின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம், சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து கார் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தை பெரம்பலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதியும், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி, கார் விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

ஹெல்மெட், சீட் பெல்ட்

இரு சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஹெல்மெட்டும், கார் விழிப்பணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சீட் பெல்ட்டும் அணிந்திருந்தனர். ஊர்வலம் புதிய பஸ் நிலையம் சென்று, மீண்டும் பாலக்கரை வந்து, வெங்கடேசபுரம் வழியாக ரோவர் வளைவு சென்று முடிவடைந்தது.
இதில் பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வக்குமார், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகன விற்பனையாளர்கள், அதில் பணிபுரியும் ஊழியர்கள், ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர்கள், பணியாளர்கள், பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.

கீழப்பழுவூர்

இதேபோல் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் தலைமையில் ெஹல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் அரியலூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன், கீழப்பழுவூர் சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார், அரசு போக்குவரத்துக் கழக மேலாளர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story