6,080 பருத்தி மூட்டைகள் வந்தன
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விற்பனைக்காக 6.080 பருத்தி மூட்டைகள் வந்தன.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன் கிழமை அன்று பருத்தி சந்தை நடைபெறும். அதன்படி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி சந்தை நடைபெற்றது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி, விழுப்பரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 925 விவசாயிகள் வாகனங்கள் மூலம் விற்பனைக்காக மொத்தம் 6,080 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். ஆத்தூர், மகுடஞ்சாவடி, கொங்கனாபுரம், சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, அன்னூர், திருப்பூர், விழுப்புரம், கும்பகோணம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பலர் கலந்து கொண்டு பருத்தியை போட்டி போட்டு கொள்முதல் செய்தனர்.
ரூ.1¼ கோடி
இதில் எல்.ஆர்.ஏ.ரகத்தை சேர்ந்த ஒரு குவிண்டால் பருத்தி அதிகபட்சமாக ரூ. 6,733- க்கும், குறைந்தபட்சமாக ரூ.4,069-க்கு விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ.1 கோடியை 29 லட்சத்தி 63 ஆயிரத்திற்கு பருத்தி விிற்பனையானது. இந்த தகவலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குனர் சஞ்சீவி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story