மீனாட்சி சொக்கநாதர் கோவில் உண்டியல் எண்ணிக்கை


மீனாட்சி சொக்கநாதர் கோவில் உண்டியல் எண்ணிக்கை
x
தினத்தந்தி 4 Feb 2021 12:21 PM IST (Updated: 4 Feb 2021 12:21 PM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியல் எண்ணிக்கை

அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்குட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோவில் உள்ளது. இந்த ேகாவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்படும் காணிக்கை பணத்தை கோவில் நிர்வாக அதிகாரிகள் 3 மாதத்திற்கு ஒரு முறை உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் உண்டியல் பணம் எண்ணப்படாமல் இருந்து வந்த நிலையில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. 
இதில் கோவில் செயல் அலுவலர் தேவி, அருப்புக்கோட்டை தாசில்தார் ரவிச்சந்திரன் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் மொத்தம் ரூ.1 லட்சத்து 81 ஆயிரம் காணிக்கை பணம் இருந்தது. 

Next Story