கேரட் சாகுபடி செய்து காரியாபட்டி விவசாயி அசத்தல்


கேரட் சாகுபடி செய்து காரியாபட்டி விவசாயி அசத்தல்
x
தினத்தந்தி 4 Feb 2021 12:21 PM IST (Updated: 4 Feb 2021 12:21 PM IST)
t-max-icont-min-icon

கேரட் சாகுபடி செய்து காரியாபட்டி விவசாயி அசத்தல்

காரியாபட்டி, 
காரியாபட்டி பகுதி மிகவும் வறட்சியான வானம் பார்த்த பூமியாகும். இந்த கரிசல் நிலத்தில் ஊட்டி போன்ற மலை பகுதிகளில் விளையும் காய்கறிகளை பயிரிடலாம் என்ற நம்பிக்கையோடு சாகுபடி செய்து வெற்றி கண்டுள்ளார் விவசாயி ராமச்சந்திரன். காரியாபட்டி அருகே மாந்தோப்பு கிராமத்தை சேர்ந்த இவர் தனது கரிசல் தோட்டத்தில் கேரட், பீட்ரூட், காலி பிளவர், முள்ளங்கி ஆகியவற்றை சாகுபடி செய்து சாதனை படைத்துள்ளார். விவசாயியின் சாதனையை அதிகாரிகள், அப்பகுதி மக்கள் பாராட்டினர். 
இதுகுறித்து விவசாயி ராமச்சந்திரன் கூறியதாவது:-
வேளாண்மை செய்வதற்கு பக்குவமான நிலம் தேவை. கரிசல் நிலத்திலும் காய்கறிகளை பயிரிட்டு லாபம் பெறலாம். மத்திய, மாநில அரசுகள் வேளாண்மை திட்டங்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வர வேண்டும் என கூறினார். 

Next Story