பள்ளி மாணவி தற்கொலை


பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 4 Feb 2021 12:22 PM IST (Updated: 4 Feb 2021 12:22 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி மாணவி தற்கொலை

கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி
கந்தம்பாளையம் அருகே மணியனூர் தச்சன்காடு பகுதியை சேர்ந்தவர் பாபு. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள், ஒரு மகன் இருந்தனர். பாபு கிணறு வெட்டும் கூலி வேலை செய்து வருகிறார். மூத்த மகள் பிருந்தா அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வருகிறார். 2-வது மகள் சந்தியா (வயது 15), மகன் தனசேகரன் ஆகியோர் கந்தம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தனர். 
இந்தநிலையில் சந்தியாவுக்கு கடந்த ஒரு ஆண்டாக மூச்சுத்திணறலும் முதுகுவலியும் இருந்து வந்ததாக தெரிகிறது. அவரது பெற்றோர் மதுரையில் உள்ள கோட்டநத்தம்பட்டியில் குடியிருந்து கூலி வேலை செய்து 6 மாதத்திற்கு ஒரு முறை வந்து குழந்தைகளை பார்த்து விட்டுச் செல்வது வழக்கம். இந்த குழந்தைகளை அவரது பாட்டி காசியம்மாள் வளர்த்து வந்தார்.
 சோகம்
இதற்கிடையே நேற்று மதியம் 2 மணி வரை பக்கத்து வீட்டுக்காரர்களிடம் சந்தியா பேசிக்கொண்டு இருந்தாராம். பின்னர் வீட்டுக்கு வந்த சந்தியாவுக்கு திடீரென மூச்சுத் திணறலும், முதுகுவலி அதிகமானதாக தெரிகிறது. அப்போது வீட்டில் யாரும் இல்லையாம். இதையடு்த்து வலி தாங்க முடியாமல் வீட்டில் உள்ள மின்விசிறியில் நைலான் கயிற்றில் மாணவி சந்தியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் உடனடியாக நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
=======

Next Story