சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க. நிர்வாகி
அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நகர பொருளாளரான அழகுமுருகன் என்பவர் சசிகலாவை வரவேற்று நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் போஸ்டர் ஒட்டி உள்ளார்.
நிலக்கோட்டை:
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார்.
தற்போது அவர், பெங்களூருவில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை வரவேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
இவ்வாறு போஸ்டர் ஒட்டிய நிர்வாகிகளை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி வருகின்றனர்.
இந்தநிலையில் அ.தி.மு.க. இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நகர பொருளாளரான அழகுமுருகன் என்பவர் சசிகலாவை வரவேற்று நிலக்கோட்டை பேரூராட்சி பகுதியில் போஸ்டர் ஒட்டி உள்ளார்.
அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் அழகுமுருகன் ஆகியோரது புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
சசிகலாவை வரவேற்று அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் நிலக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story