எஸ்.புதூரில் கடும் பனிப்பொழிவு
எஸ்.புதூரில் கடும் பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஒன்றியம் மலையும், மலைசார்ந்த பகுதியாக இருந்த போதிலும் தட்ப, வெப்பநிலை சமமாகவே காணப்பட்டு வந்தன. ஆனால் கடந்த சில மாதங்களாக இப்பகுதிகளில் இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகின்றது. இப்பகுதி மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளனர். இந்த நிலையில் இரவில் வாட்டும் பனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு தொடங்கும் பனி காலை 8 மணி வரை நீடித்து வருகின்றது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லும் விவசாயிகள் 8 மணிக்கு பிறகே வயல்வெளிகளுக்கு ஓட்டி செல்கின்றனர். இரவில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். தற்போது நிலவும் பனி காரணமாக குழந்தைகள், முதியவர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பனி காரணமாக கம்பளி, போர்வைகள் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story