திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக முத்துகுமாரசாமி பதவியேற்று கொண்டார்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக முத்துகுமாரசாமி பதவியேற்று கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த பி.ரத்தினசாமி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அங்கு பணியாற்றி வந்த ஆர்.முத்துகுமாரசாமி திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலராக ஆர்.முத்துகுமாரசாமி பதவி ஏற்று கொண்டார். அவரை வருவாய்த்துறை அலுவலர்கள் வரவேற்றனர்.
Related Tags :
Next Story