பறவைகள் சரணாலயங்களில் 5 ஆண்டுகள் செயல் திட்டம்
மாவட்டத்தில் உள்ள சரணாலயங்களில் செயல் திட்டம் குறித்து சரணாலய பகுதியில் உள்ள பொதுமக்களுடன் வனத்துறையினர் கலந்துரையாடல் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
ராமநாதபுரம்,
மாவட்டத்தில் உள்ள சரணாலயங்களில் செயல் திட்டம் குறித்து சரணாலய பகுதியில் உள்ள பொதுமக்களுடன் வனத்துறையினர் கலந்துரையாடல் கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், காஞ்சிரங்குடி, தேர்தங்கால், சித்தார்கோட்டை உள்ளிட்ட 5 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இந்த சரணாலயங்களுக்கு நீர்வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளான், அரிவாள் மூக்கன், நாரை, பாம்புதாரா, நீர் காகங்கள் என 100-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தும் மார்ச் மற்றும் ஏப்ரல் முதல் வாரம் வரை இருந்து தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்து மீண்டும் பறந்து செல்லும்.
இந்த நிலையில் ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள சரணாலயப் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வனத் துறையினர் இணைந்து அடுத்த 5 ஆண்டுகளில் சரணாலயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் கூட்டம் ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் வனச் சரக அலுவலர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை
கூட்டத்தில் சரணாலயப் பகுதியில் வசிக்கும் மக்கள் பங்கேற்று சரணாலயங்கள் சுற்றி உள்ள பகுதிகளில் மரம் நடுதல், குளங்கள் தூர்வாருதல் மற்றும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அந்த மரங்களை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வைத்தனர். இதற்கு வனத்துறை ஏற்பாடு செய்து தருவதாகவும் அதில் எந்த சிக்கலும் இருக்காது என்று வனத்துறை அதிகாரி கூறினார்.
Related Tags :
Next Story