பெரியகிளாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம்
பெரிய கிளாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலசபாக்கம்
பெரிய கிளாம்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் பெரியகிளாம்பாடி கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது.
இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயிர் கடன் மற்றும் நகை கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்குவதில் பாகுபாடு பார்த்து நகை கடன் வழங்கப்படுவதாகவும், தற்போது நகை கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தேவனாம்பட்டு, காட்டுப்புத்தூர், ஊதிரம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பெண்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு வழக்கறிஞர் காசிநாதன், ஒன்றிய கவுன்சிலர் சிவராமன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story