கழிவறை தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோ எந்திரங்களை பயன்படுத்த வேண்டும்-கலெக்டர் சிவன்அருள்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கழிவறை தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோட்டிக் எந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், என கலெக்டர் சிவன்அருள் பேசினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கழிவறை தொட்டிகளை சுத்தம் செய்ய ரோேபாட்டிக் எந்திரங்களை பயன்படுத்த
நடவடிக்கை எடுக்க வேண்டும், என கலெக்டர் சிவன்அருள் பேசினார்.
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மனித கழிவுகளை அகற்றும் சுகாதாரப்
பணியாளர்களின் நலனை பேணுவதற்கான மாவட்ட சுகாதாரப் பணியாளர்களின் மறு சீரமைப்பு
குழுவின் முதல் கூட்டம் கலெக்டர் சிவன்அருள் தலைமையில் நடந்தது.
அதில் கலெக்டர் பங்கேற்றுப் பேசியதாவது:-
மனித கழிவுகளை அகற்றும் ஊழியர்கள்
மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை சக மனிதர்களுக்கு
வழங்கப்படும் அனைத்து மரியாதைகளையும் வழங்கப்படுவதை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.
மனித கழிவுகளை அகற்றும் பணியாளர் மற்றும் மறுவாழ்வு சட்டத்தின் விதிமுறைகளை செயல்படுத்திட
வேண்டும்.
தாட்கோ வங்கி மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூலம் இவர்களின் பிள்ளைகளின் படிப்பு, தொழில் ஆகிய
பொருளாதார முன்னேற்றத்துக்கு வங்கி கடனுதவிகளை பெற்று தந்து, சமூக மற்றும் பொருளாதார
மறுவாழ்வு ஏற்படுவதற்கு ஆலோசனைகளை குழு வழங்கிட வேண்டும்.
ரோபோ எந்திரம்
மனித கழிவு மற்றும் தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டு வரும் பணியாளர்களின் உடல் பரிசோதனையினை
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மாதம் மாதம் மருத்துவ முகாம் நடத்தி, அவர்களை பாதுகாக்க
வேண்டும். உரிய பாதுபாப்பு உபகரணங்களை கட்டாயமாகப் பயன்படுத்தி பணிபுரிவதை அலுவலர்கள்
கண்காணிக்க வேண்டும்.
வாணியம்பாடி, ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் இப்பகுதி
குடியிருப்புகளில் கழிவறை தொட்டிகள் சுத்தம் செய்யப்படுவதை நகராட்சி சுகாதார அலுவலர் மற்றும்
ஆணையாளர்கள் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, அனைத்து நகராட்சிகளிலும் கழிவறை
தொட்டிகள் சுத்தம் செய்திட ரோேபாட்டிக் எந்திரங்களை பயன்படுத்தி சுத்தம் செய்திடும் புதிய
நடவடிக்கையை செயல்படுத்த வேண்டும்.
உடல் ஆரோக்கியம்
மனித கழிவு அகற்றும் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் நலனை பேணுவதற்கான மாவட்ட
அளவிலான நிலைக்குழுவின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள குழு உறுப்பினர்கள்
பணியாளர்களின் வாழ்க்கை மேம்பாடு, உடல் ஆரோக்கியம் மற்றும் பணி செய்யும் சூழலில்
தேவைப்படும் வசதிகள் குறித்து தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பூங்கொடி, ஊராட்சிகள் உதவி இயக்குனர்
அருண், நகராட்சி ஆணையாளர்கள் சவுந்திரராஜன், ராமஜெயம், சத்தியநாதன், குழு உறுப்பினர்கள்,
வழக்கறிஞர்கள் ஆனந்தராஜ், முருகேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story