திருப்பத்தூரில் டாக்டர்கள் உண்ணாவிரதம்


திருப்பத்தூரில் டாக்டர்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 4 Feb 2021 5:19 PM IST (Updated: 4 Feb 2021 5:19 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் மத்திய அரசு சட்ட திருத்தத்தை கண்டித்து டாக்டர்கள் உண்ணாவிரதம்

திருப்பத்தூர்

ஆயுஸ் மருத்துவம் படித்தவர்கள் அலோபதி மற்றும் ஆப்பரேஷன் செய்யும் ஒரே கலவை என்ற 
சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளதாகவும் இதனை கண்டித்து திருப்பத்தூர் 
மாவட்ட இந்திய மருத்துவ சங்க கிளை டாக்டர்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் திருப்பத்தூர்- 
வாணியம்பாடி சாலையில் திருப்பத்தூர் ஐ.டி.ஐ. அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

 போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்க திருப்பத்தூர் மாவட்ட கிளைத் தலைவர் பி.பிரபாகரன், 
தலைமை தாங்கினார், கே.டி.சிவக்குமார் முன்னிலை வகித்தார், உண்ணாவிரத போராட்டத்தை 
டாக்டர் லீலாசுப்பிரமணியம், தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்தும்
 கலப்பு மருத்துவ முறையை கொண்டு வந்தால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் பேசினார்.
 
மேலும் மத்திய அரசு கொண்டு வரும் நித்திஆயோக்கை மற்றும் சால்யதந்திரம், ஆகியவற்றை
 உடனடியாக நீக்கவேண்டும், பழைய அலோபதி முறையை தொடர மத்திய அரசு உத்தரவிட 
வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினர். 

உண்ணாவிரத போராட்டத்தில் அரசு மருத்துவ அலுவலர்  திலீபன், சந்திரா, ஜெயராமன், வேல்முருகன், இளம்பருதி, செல்லப்பன், வினோதினி உள்பட  
ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் டி.பி.மணி நன்றி கூறினார் போராட்டம் காரணமாக அனைத்து ஆஸ்பத்திரிகளும் மூடப்பட்டிருந்தது. இதனால் நோயாளிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.


Next Story