கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை


கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 4 Feb 2021 6:40 PM IST (Updated: 4 Feb 2021 6:40 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி:

குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். 

கிராம மக்கள் முற்றுகை

கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, ஆசூர், தளவாய்புரம், சவலாப்பேரி ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த மக்கள்  கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பிரேம்குமார் தலைமை தாங்கினார். இதில், ம.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கே.அழகர்சாமி, மாணவரணி துணை அமைப்பாளர் ராஜகுரு,  சிவசுப்பிரமணியன், ஆதிமூலம், பாலமுருகன், சீனிவாசன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு கொண்டனர்.

குடிநீர் பிரச்சினை

பின்னர் கிராம மக்கள் உதவி கலெக்டர் சங்கரநாராயணனிடம் மனு கொடுத்தனர். அதில், கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல், சத்திரப்பட்டி, வில்லிசேரி, ஆசூர், தளவாய்புரம், சவலாப்பேரி ஆகிய கிராமங்களில் சுமார் சுமார் 25 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு கோவில்பட்டி-சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் இருந்து தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி நகருக்கு 2-வது குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் பின்னரும் கிராமங்களுக்கு வினியோகிக்கப்பட்ட குடிநீர் வினியோகத்தில் தடை ஏற்படவில்லை.

இந்த நிலையில், சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் நீரேற்றும் நிலையத்தில் உள்ள குழாய்கள் பழுதடைந்ததால், கடந்த 2 மாதங்களாக மேற்கண்ட 6 கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் அவதிப்படுகிறோம். எனவே உடனடியாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் வருகிற 11-ந் தேதி தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

Next Story