திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்: உண்டியல் வருமானம் ரூ.1.27 கோடி


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில்: உண்டியல் வருமானம் ரூ.1.27 கோடி
x
தினத்தந்தி 4 Feb 2021 10:40 PM IST (Updated: 4 Feb 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1.27 கோடி கிடைத்துள்ளது.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1.27 கோடி கிடைத்துள்ளது.

உண்டியல் எண்ணிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொதுமக்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதம் இரண்டு முறை எண்ணப்படும். இந்த மாதம் உண்டியல் முதல் முறையாக  கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தம்மாள் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் எண்ணப்பட்டன. 

கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி தலைமையில், தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், உதவி ஆணையர்கள் செல்வராஜ், ரோஜாலி, ஆய்வாளர்கள் முருகன், சிவலோகநாயகி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் மற்றும் சிவகாசி பதினெண்சித்தர் மடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர் உண்டியல் பணத்தை எண்ணினர்.

ரூ.1.27 கோடி

இதில், நிரந்தர உண்டியலில் இருந்து 1 கோடியே 27 லட்சத்து 27 ஆயிரத்து 91 ரூபாய் கிடைத்துள்ளது. அதேபோல் 764 கிராம் தங்கமும், 21 ஆயிரத்து 960 கிராம் வெள்ளியும், 32 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

Next Story