ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும்


ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும்
x
தினத்தந்தி 4 Feb 2021 11:08 PM IST (Updated: 4 Feb 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்று இந்துமக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்

ஆற்காடு 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் இந்து மக்கள் கட்சி சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ஆற்காடு நகர தலைவர் மணிகண்டன் வரவேற்றார். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசினார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது>-

 வருகிற சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஆற்காடு, ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சி போட்டியிடும்.ஆன்மீக அரசியல் கொள்கைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்வோம். கோயில்களுக்கு சொந்தமான பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அதனை அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வளம் ஆகியவை பின்தங்கிய நிலையில் உள்ளது. மாவட்டத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தொழில், வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, தலைவர்களின் நினைவு நாளுக்கு சமபந்தி விருந்து அளிப்பதை தடை செய்ய வேண்டும்.உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது. 

ஆற்காடு நகரில் கழிவு நீர் வசதி, போக்குவரத்து நெரிசல், வாகன நிறுத்தம் போன்றவை சரியாக இல்லை. அவற்றை சரிசெய்ய கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்படும்.அதன் மீது நடவடிக்கை இல்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றார் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story