அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கைக்கோள்
பென்னாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கைக்கோள் ராட்சத பலூன் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.
வேலூர்,
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவாக ராமேஸ்வரத்தில் இருந்து சாதனை முயற்சியாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தயாரிக்கும் மிகச்சிறிய செயற்கைக்கோள்கள் ஒரேநேரத்தில் வருகிற 7-ந் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. அறிவியல் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ்-1 மாணவர் கவுதம், பிளஸ்-2 மாணவர் தேவேந்திரன் ஆகியோர் தயாரித்துள்ள 40 கிராம் எடை கொண்ட செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன் கூறுகையில், ராமேஸ்வரத்தில் ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட ராட்சத பலூனில் ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் மாணவர்கள் தயாரித்துள்ள சுமார் 100 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது. சுமார் 35 ஆயிரம் முதல் 38 ஆயிரம் மீட்டர் உயரம் பறந்த பின் பலூன் வெடிக்கும். கீழே வந்தடைந்தபின், செயற்கைக்கோளில் சேகரிக்கப்பட்ட தகவல்களை பயனுள்ளதாக அமையும்.
இந்த நிகழ்வில் பங்கேற்க எங்கள் பள்ளி அறிவியல் ஆசிரியை கோட்டீஸ்வரி தலைமையில் 2 மாணவர்களும் ராமேஸ்வரத்துக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பயணம் செய்ய உள்ளனர், என்றார்.
Related Tags :
Next Story