குளித்தலையில் சாலை பாதுகாப்பு மாத விழா - திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் அறிவுரை


குளித்தலையில் சாலை பாதுகாப்பு மாத விழா - திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் அறிவுரை
x
தினத்தந்தி 5 Feb 2021 12:08 AM IST (Updated: 5 Feb 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலையில் நடந்த சாலை பாதுகாப்பு மாத விழாவில் மாணவ-மாணவிகள் நல்ல முறையில் படித்து தங்களது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் அறிவுரை கூறினார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை போக்குவரத்து போலீசார் சார்பில் 32 -வது சாலை பாதுகாப்பு மாத விழா குளித்தலையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி. ஜெயராம் கலந்து கொண்டு, சாலை பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினார். 

அப்போது அவர் பேசியதாவது:-

காவல்துறை பொதுமக்களின் பாதுகாப்பிற்கே உள்ளது. கணினி மயமான காலகட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு அதிகப்படியான பொறுப்புகள் உள்ளன. நல்ல முறையில் படித்து தங்களது அறிவுத்திறனை மாணவ- மாணவிகள் பெருக்கிக் கொள்ள வேண்டும். தங்களது பெற்றோருக்கு சாலை விதிகளை கடைப்பிடிப்பது குறித்து மாணவ-மாணவிகள் எடுத்துக்கூற வேண்டும்.
 
தற்போது வாகனங்கள் அதிக அளவில் பெருகிவிட்டன. அதுபோல சாலை விபத்துகளும் அதிக அளவில் நடைபெறுகிறது. ஒவ்வொருவரும் தங்களது வாகனங்களை ஓட்டும் முன்பு முதல்முறையாக வாகனத்தை ஓட்டுகிறோம் என்று எண்ணி வாகனங்களை ஓட்ட வேண்டும். பல்வேறு சிந்தனைகளை மனதில் வைத்துக்கொண்டு வாகனங்களை ஓட்டினால் விபத்து நேரிட வாய்ப்பு உள்ளது. எனவே சாலை விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். 

இந்த விழாவில் பங்கேற்ற திருச்சி சரக டி.ஐ.ஜி.ஆனிவிஜயா சாலை விதிகளை கடைப்பிடிப்பதின் முக்கியத்துவம் குறித்து பேசினார். 
இதில் குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் போலீசார்மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு சசிதர் வரவேற்றார். முடிவில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story